UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam party ‘Women’s day Celebration’
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

Makkal Needhi Maiam party ‘Women’s day Celebration’

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டது.


தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டலப் பொறுப்பாளர் திருமதி கமீலா நாசர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி ஒருங்கிணப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா அவர்கள் மகளிர் தின விழா உரையாற்றினார். 


மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல துறைகளில் சாதனைபடைத்த பெண்கள் இன்று இணைந்தனர். நடிகை ‘கோவை’ சரளா அவர்கள், திருமதி மூகாம்பிகா ரத்தினம் அவர்கள், டாக்டர் உஷா இளங்கோ அவர்கள், சென்னையைச் சேர்ந்த 3௦ மாணவியர் மற்றும் தென் சென்னை அரிமா சங்க உறுப்பினர்களும் கட்சியில் இணைந்தனர்.


கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், மகளிர் தின தீபத்தை, கட்சியின் மகளிருடன் இணைந்து ஏற்றினார். பின்,‘வாக்குரிமையின் முக்கியத்துவத்தைஎடுத்துரைக்கும் காணொளியை வெளியிட்டார்.


மகளிரிடம் உரையாடிய அவர், “மகளிர் தினத்தன்று பல முக்கியமான சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் செயலாற்றிய பணியாற்றிய பெண்கள் நமது கட்சியில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.தாய்மார்களுடனும் சகோதரிகளுடனும், சகோதர்களின் பெண்களுடனும் எனது பெண்களுடனும் என எனது வாழ்க்கை மகளிரால் சூழப்பட்டு இருந்தது. இருக்கின்றது. மகளிர் என்பது பெரும் சக்தி என்பதை நான் உணர்ந்ததுவிட்டேன், அதை பெண்கள் நீங்கள் அனைவரும் உணரவேண்டும். பெண்களுக்கு தங்களின் சக்தியை உணரும் பொழுது தானாகவே மேம்பாடு அடைவீர்கள் என்பது உறுதி.ஆண்களை விட அனைத்திலும் அதிக விழுக்காடு பெறுவதற்கு பெண்கள் உரிமை பெற்றவர்கள். அவர்களின் உரிமை எவ்விதத்திலும் எவராலும் மறுக்கப்படக் கூடாது.

 

அரசியல்வாதிகள் ஏழ்மையை மிகப்பாதுகாப்பாக காப்பாற்றி வருகிறார்கள். ஆனால் ஏழ்மை ஒழிப்பு என்று பொய் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

ஒரு நாள் ஒரு தடவை சிறு பணத்தை கொடுத்துவிட்டு, தமது கடமையில் இருந்து விலகி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் போல நாங்கள் இருக்கமாட்டோம்.நாங்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு நீண்ட நாள் தீர்வுகளை நோக்கி செல்கிறோம். வேலைவாய்ப்பு பெருகிட வேண்டும்.

 

அரசியல் சௌகரியத்திற்காக மட்டுமே மக்களின் வேலை வாய்ப்பினை தடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.பாராளுமன்றத்தில் தமிழ் குரல் ஒலித்திட வேண்டும். அந்தக் குரலை ஒட்டு மொத்த இந்தியாவும் மரியாதையுடன் கேட்க வேண்டும். அது நம் குரலாக இருக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் குரல் தமிழக மக்களின் குரலாக இந்தியப் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.

 

எனக்குப் பிறகு எனது மகனோ, மைத்துனனோ கிடையாது. வாரிசு அரசியல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கிடையாது. இருக்காது.புரட்சி உங்களிடம் இருந்து துவங்க வேண்டும்.நான் எப்பொழுதும் சொல்வது போல நான் தலைவர்களின் முன் தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்.தொண்டர்கள் முன் இல்லை.யாரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் உங்கள் கையில் தான் இருக்கின்றது.இதற்கு முன்பும் நீங்கள் தான் தேர்ந்தெடுத்தீர்கள், இனியும் நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். எனவே உங்களின் பொறுப்பும் கடமையும் அதிகம். அதை மக்கள் உணரவேண்டும்.என்றார்.


கட்சி உறுப்பினர் திருமதி புவனா நன்றியுரையாற்றினார்.

 

 

Makkal Needhi Maiam party celebrated Women’s Day at the party office today. MNM Chennai Zonal In-charge Ms Kameela Nasser delivered the welcome speech, Women and Children Welfare Wing Coordinator Ms Sripriya spoke about Women’s Day and the role of women in politics. Eminent women including Actress ‘Kovai’ Sarala, Ms MookambikaRathinam, Dr Usha Elangojoined the party. Together with the party President they lit a torch to symbolise the justice and freedom of women. Party President Mr Kamal Haasan then launched a video where women of various walks of life spoke about the importance of voting.

 

While addressing the gathering, party President Mr Kamal Haasan said, “It is heartening to see that women who have contributed to the betterment of the society through various fields, have joined our party.I wish the mothers, sisters, daughters and nieces a very happy women's day. I have understood that women are a force to reckon with, you must understand your potential as well.When women realise what they are capable of, empowerment will follow.My upbringing was key in making me respect women. I learnt to respect women from my home.Women deserve more percentage of everything.”

 

More than 30 College students from Chennai and members of South Chennai Lions Club joined the party today.

 

MNM General Secretary Mr A.Arunachalam, Coordinator of the Women and Children Welfare wing Ms Sripriya, Chennai Zonal In-charge Ms Kameela Nasser, Cuddalore Zonal In-charge Mr C.K.Kumaravel, State Executive Committee member Mr Gandhi Kannadhasan andPudukottai, Sivagangai Zonal In-charge Mr Snehan were also present during the event.

 

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.